நடிகர் சூர்யா தனது பிறந்தநாளை எதற்கும் துணிந்தவன் படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார் .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவின் 40-வது திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், திவ்யா துரைசாமி, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
.@Suriya_offl birthday celebrations from the sets of #EtharkkumThunindhavan!@pandiraj_dir @immancomposer @RathnaveluDop @priyankaamohan @sooriofficial#ET #எதற்கும்துணிந்தவன் #HappyBirthdaySuriya pic.twitter.com/1DF4Y3b8r9
— Sun Pictures (@sunpictures) July 23, 2021
இந்நிலையில் நடிகர் சூர்யா நேற்று தனது பிறந்தநாளை எதற்கும் துணிந்தவன் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். மேலும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகாவும் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.