இலங்கையின் முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமா கடிதத்தை பசில் ராஜபக்சே இலங்கை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் வழங்கினார். இது குறித்து ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்து உள்ளேன். எம்.பி. பதவியை துறந்தாலும் அரசியலில் வளர்ச்சிக்காக தனது முழு நேர பங்களிப்பை ஆற்றுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து பசில் ராஜபக்சே ராஜினாமா செய்த பிறகு அப்பதவியில் தொழிலதிபர் தம்மிக பெரேரா நியமிக்கப்பட உள்ளதாகவும் பின்னர் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடி தவிர்த்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.