Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எதார்த்தமாக திட்டிய பெண்….. முதியவரின் கொலை வழக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

முதியவரை கொலை செய்த குற்றத்திற்காக கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இலந்தைகுளம் பகுதியில் சண்முகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவி இருக்கிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு சேட்டை செய்த தனது குழந்தைகளை காளீஸ்வரி எதார்த்தமாக திட்டியுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான பாலமுருகன் என்பவர் இறந்து போன தனது தாயாரை தான் காளீஸ்வரி திட்டுகிறாரோ என தவறுதலாக நினைத்துள்ளார். இதனால் கோபமடைந்த பாலமுருகன் காளீஸ்வரியை அரிவாளால் வெட்ட முயற்சி செய்துள்ளார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த காளீஸ்வரியின் தாத்தாவான ஆறுமுகப்பெருமாள் பாலமுருகனை தடுப்பதற்கு முயற்சி செய்ததால் முதியவர் மீது வெட்டு விழுந்துள்ளது. இதனால் படுகாயம் அடைந்த ஆறுமுக பெருமாளை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆறுமுகப்பெருமாள் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |