கடந்த 1995ல் வெளியாகிய “முறை மாப்பிள்ளை” திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியவர் அருண்விஜய். இவர் இப்போது நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். கவுதம்மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த பிறகு அவருடைய கதைதேர்வு வித்யாசமானதாக இருந்தது.
இதையடுத்து அவர் நடித்த தடம், குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், மாஃபியா போன்ற படங்களின் வெற்றி அருண்விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தது. இப்போது அருண்விஜய் ஹரிதாஸ் திரைப்படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்து இருக்கிறார்.
இப்படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசை அமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த சூழ்நிலையில் கோவையிலுள்ள திரையரங்கில் சினம் படத்தின் முன்னோட்ட காட்சிகள் திரையிடப்பட்டயது.
இவற்றில் நடிகர் அருண்விஜய், நடிகை பாலக் லால்வாணி கலந்துகொண்டனர். அதன்பின் அருண்விஜய் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது, அனைத்து குடும்பத்திலும் இருக்கிற கோபத்தைதான் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கிறோம். அதனையே கதை கருவாககொண்டு இந்த படமும் எடுக்கப்பட்டுள்ளது. எதார்த்தமான கேரக்டர் தான் இப்படத்தில் இருக்கிறது. அத்துடன் சாதாரண சப்இன்ஸ்பெக்டர் அவனுக்கு ஒரு குடும்பம், காதல் என ஆரம்பித்து அவனை வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறது. எந்த இடத்தில் அவன் கோபமடைகிறான் என்பதை அழகா இயக்குனர் அமைத்துள்ளார் என்று கூறினார்.