Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எதிரணி அஞ்சும்….. “கண்டிப்பா இவர் டீம் லெவனில் இருக்கனும்”….. ஆஸி., முன்னாள் ஜாம்பவான்..!!

ஆஸ்திரேலியாவின் ப்ளேயிங் லெவன் அணியில் டிம் டேவிட் இடம் பெற வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகளும் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான அணியை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் உட்பட அனைத்து நாடுகளும் அறிவித்து விட்டது..

இந்த முறையும் டி20 உலகக்கோப்பையை தக்க வைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா வியூகங்களை வகுத்து வருகிறது.. அதேபோல மற்ற நாடுகளும் கோப்பையை வெல்வதற்காக அணியை வலுப்படுத்தி வருகிறது.. ஒவ்வொரு அணியிலும் இவரை டி20 உலகக்கோப்பையில் ஆட வையுங்கள், அவரை ஆட வையுங்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டர் ஆடம் கில்கிறிஸ்ட், எதிர்வரும் டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியாவின் ப்ளேயிங் லெவன் அணியில் டிம் டேவிட் இடம் பெற வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கடந்த 18 மாதங்களில் 26 வயதான பேட்டரின் பலத்தையும் அவரது ஃபார்மையும் கண்டு எதிரணிகள் அஞ்சும் என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூருக்காக 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட், இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவில் அறிமுகமானார். இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் டிம் டேவிட் அதிரடியாக 27 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

2022 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் பின்ச் (கேட்ச்), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட் , டேவிட் வார்னர், ஆடம் சாம்பா.

Categories

Tech |