Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எதிரிகளாக இருந்த 4 வீரர்களை சேர்த்து வைத்த மெகா ஏலம்”…. அப்ப ஒரு தரமான சம்பவம் இருக்கு.… மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

ஐபிஎல் மெகா ஏலம் மூலம் எதிரிகளாக இருந்த நான்கு வீரர்கள் ஒன்று சேர்ந்துள்ளது ரசிகர்களுக்கு இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் ஐபிஎல் 15- வது சீசனுக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் கடந்த ஏலத்தில் முதல் வீராக இருந்த ஷிகர் தவன், இந்த ஆண்டு மெகா ஏலத்திலும் முதல் வீராக இடம் பெற்றார்.  பஞ்சாப் கிங்ஸ் அணி 8.25 கோடிக்கு இவரை வாங்கியது. அடுத்ததாக 5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அஸ்வினை தட்டி தூக்கியது . ஜாஸ் பட்லர் ஏற்கனவே இந்த ராஜஸ்தான் அணியில் உள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் விளையாடியபோது ராஜஸ்தான் ராயல்ஸ் வீரரான ஜாஸ் பட்லரை மான்கட்டிங் முறையில் வீழ்த்தி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

இதை அடுத்து இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டது. பிறகு தற்போதைய ஐபிஎல் மெகா ஏலம்  இருவரையும் சேர்த்து வைத்தது. இதனை இணையத்தில் ரசிகர்கள் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை  வெளிப்படுத்தி உள்ளனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9.25 கோடிக்கு  காகிசோ ரபாடாவை  வாங்கியது. இவ்வாறாக விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் க்ருனால்  பாண்டியா ஏலத்திற்கு வந்தார். லக்னோ அணி இவரை கடுமையாக போராடி 8.25 கோடிக்கு தட்டி தூக்கியது.

அதைத்தொடர்ந்து 5.25 கோடிக்கு தீபக் ஹூடாவை லக்னோ அணி கடுமையான போராட்டத்துக்குப் பிறகு ஏலத்தில் எடுத்தது. ஏற்கனவே, பரோடா அணிக்காக இருவரும் விளையாடிய போது , அப்போது கேப்டனாக இருந்த க்ருனால் பாண்டியா, தீபக் ஹூடா  இருவருக்கு இடையில் கடுமையான பிரச்சனை உருவாகியது. அப்போது தீபக் ஹூடா ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் க்ருனால் பாண்டியா தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் திட்டி வருவதாகவும் மற்றும் சக வீரர்கள் முன் அவமானப்படுத்தி வருவதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் ஒரே அணியில் மீண்டும் இருவரும் இடம் பிடித்தது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |