விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்திலிருந்து தற்போது கசிந்த மால் புகைப்படத்தால் எரிச்சலடைந்த ரசிகர்கள் இயக்குனர் நெல்சன் என்னதான் செய்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜய்யும், அவருக்கு ஜோடியாக பூஜாவும் நடித்துள்ளார்கள். இதனை நெல்சன் திலிப்குமர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த படத்தினை சென்னையில் பிரம்மாண்டமாக மால் போன்று செட் போட்டு அதில் இயக்குனர் திலீப் குமார் எடுத்துள்ளார். இந்த படத்தின் செட்டிலிருந்து அடிக்கடி ஏதாவது ஒரு புகைப்படம் வெளியாகி மிகவும் வைரலாகி கொண்டே வந்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் சென்னையில் படப்பிடிப்பிற்காக போடப்பட்ட பிரம்மாண்டமான மாலின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் எரிச்சலடைந்த ரசிகர்கள் படக் குழுவிலிருக்கும் யாரோ ஒருவர் தான் இந்த வேலையை செய்கிறார்கள்.
ஆகையினால் அவரை நெல்சன் திலீப்குமார் விரைவில் கண்டுபிடிக்க வேண்டுமென்று கூறியுள்ளார்கள். மேலும் நெல்சன் திலீப்குமார் என்னதான் செய்கிறார் என்று ரசிகர்கள் கேள்வியையும் எழுப்பியுள்ளார்கள்.