சீனாவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் ஒன்று எதிரே வந்த லாரியின் மீது மோதிய விபத்தில் 15 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்கள்.
சீனாவில் ஹெய்லாங்சியக் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியிலுள்ள சாலை ஒன்றில் கனரக வாகனம் ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் திடீரென இந்த கனரக வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனையடுத்து சாலையில் தாறுமாறாக ஓடிய அந்த கனரக வாகனம் எதிரே வந்த லாரியின் மீது சட்டென மோதியுள்ளது.
இவ்வாறு கனரக வாகனமும், லாரியும் எதிரெதிரே மோதிய விபத்தில் அங்கிருந்த அப்பாவி பொதுமக்களில் சுமார் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி ஒரே ஒரு நபர் படு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். அந்த உயிர்தப்பிய நபரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.