Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எதிரே வந்த தம்பதியினர்…. பள்ளத்திற்குள் இறங்கிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

பேருந்து பள்ளத்திற்குள் இறங்கி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடையக்குறிச்சி கிராமத்திற்கும் விருதாச்சலத்திற்கும் இடையே அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வளைவில்,  அரசு பேருந்து சென்றுகொண்டிருக்கும் போது எதிரே இருசக்கர வாகனத்தில்  ஒரு தம்பதியினர் சென்றுள்ளனர். இதனை பார்த்ததும் பேருந்து ஓட்டுனர், அந்த தம்பதியினர் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை சற்றுத் திருப்பியுள்ளார்.

ஆனால் கட்டுபாட்டை இழந்த பேருந்து சாலை ஓரம் இருந்த  பள்ளத்தில் இறங்கி விட்டது. இந்த விபத்தில் பயணிகள் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பி விட்டனர். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் அச்சத்தினால் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இவ்வாறு அரசு பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பயணிகளுக்கும், எதிரே வந்த தம்பதிகளுக்கும் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

Categories

Tech |