தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி, சீமான் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும், அன்னை சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி, தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இவர் வெளியிட்ட அறிக்கையாவது ,”சீமான் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத மற்றும் எதற்கும் அடங்க மறுக்கிற அடாவடித்தனமான செயலை செய்யும் சமூகசீர்குலைவு சக்தியாக இருக்கிறார். எனவே தமிழக காவல்துறையினர் சீமான் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் இளைஞர்களை தவறான தீவிரவாத பாதைக்கு கொண்டு செல்லுமாறு இவரது பேச்சுகள் அமைந்துள்ளன.
எனவே இவரை தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் நாம் தமிழர் கட்சி ஆனது ஒரு தீவிரவாத அமைப்பாக மாற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் இவரது பேச்சுக்கள் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இவரின் மீது தமிழக அரசு அரசானது நடவடிக்கை மேற்கொண்டால் தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.