குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகரில், கல்வி மந்திரிகளின் 2-நாள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இம்மாநாட்டில், நேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியுள்ளதாவது, தேசிய கல்வி கொள்கையில், மழலையர் வகுப்பு முதல் மேல்நிலை கல்விவரை இடம்பெற்றுள்ளது. மேலும் 5+3+3+4 என 5-ஆம் வகுப்பில் இருந்து பட்டப்படிப்புவரை கல்விமுறையானது வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே மழலையர் கல்வி, ஆசிரியர் பயிற்சி, வயது வந்தோர் கல்வி, பள்ளி கல்வியுடன் திறன் மேம்பாட்டை இணைத்தல் மற்றும் தாய்மொழி கல்விக்கு முன்னுரிமை ஆகியவை 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப குடிமக்களை தயார்படுத்த செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்தியாவை அறிவுசார்ந்த பொருளாதாரமாக மாற்றுவதற்கு , அடுத்த 25-ஆண்டு கால கல்வி மிகவும் முக்கியம்.
மேலும் இதற்கு ஒருவருக்கொருவர் தங்கள் அனுபவங்கள் மற்றும் வெற்றிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். எனவே இந்தியாவை அறிவுசார்ந்த பொருளாதாரமாக மாற்ற பள்ளி கல்விதான் அடித்தளம் ஆகும். ஆகவே இதனை கருத்தில் கொண்டு, ‘பிரதமர் ஸ்ரீ பள்ளிகள்’ என்ற பெயரில் பள்ளிகளை அமைக்கும் பணியை , மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இதையடுத்து இப்பள்ளிகள், எதிர்காலத்துக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார்படுத்துவதை இதன் நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் தேசிய கல்வி கொள்கைக்கான ஆய்வுக்கூடமாகவும் மற்றும் அனைத்து நவீன வசதிகளும் இதில் அடங்கும் . இதனை தொடர்ந்து, 21-ஆம் நூற்றாண்டு அறிவு மற்றும் திறன்கள் நமது புதிய தலைமுறைக்கு கிடைக்கச் செய்ய வேண்டும்.
மேலும் அந்த வகையில் ‘பிரதமர் ஸ்ரீ பள்ளிகள்’ எதிர்காலத்துக்கான மாதிரி பள்ளிகளாக திகழும். இவ்வாறு கர்நாடகா, ஒடிசா, டெல்லி, மேகாலயா, பீகார், உத்தரபிரதேசம், குஜராத், அரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள கல்வி மாதிரிகள் சிறந்த பலன்களை அளிக்கும் எனவும் அவர் பேசியுள்ளார்.