Categories
அரசியல்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில…. “ஆளுநர்கள் ஒற்றர்கள் போல தா இருக்காங்க”….  ஒரே போடு போட்ட முத்தரசன்…!!!!

நேற்று புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன், “தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் 21 விதமான பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பொங்கல் முடிந்தும் புதுவையில் மட்டும் இன்னும் அறிவிக்கப்பட்ட பொருட்கள் மக்களுக்கு சென்றடையவில்லை. அதேபோல் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு மற்றும் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் புதுவையில் தடை ஏதும் விதிக்கப்படவில்லை. இதன் காரணமாக இப்போது புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பு மூவாயிரமாக உயர்ந்துள்ளது. அரசின் செயல்பாடுகளால் தான் தற்போது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பொறுப்பு கவர்னர் தான் கடந்த 10 மாதமாக புதுவையை கவனித்து வருகிறார். ஆனால் பாஜகவை சார்ந்தவராக தான் கவர்னரும் செயல்படுகிறார். பாஜக இல்லாமல் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் ஊழியர்கள் போல் கவர்னர்கள் செயல்படுகிறார்கள். இது ஜனநாயகத்திற்கு நல்லது கிடையாது” என்று முத்தரசன் கூறியுள்ளார்.

Categories

Tech |