Categories
மாநில செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் யாருன்னு தெரியுமா….? நானும் ரொம்ப நாளா அவரத்தான் தேடிட்டு இருக்கேன்…. அமைச்சர் துரைமுருகன் செம கலாய்….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 15-ஆம் தேதி திமுக கட்சியின் சார்பில் முப்பெரும் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதிய 4041 கடிதங்கள் அடங்கிய, 21,510 பக்கங்கள் கொண்ட நூலை 54 தொகுதிகளாக வெளியிட்டார். இதை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இதேபோன்று முதல்வர் ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் புத்தகத்தை அமைச்சர் துரைமுருகன் வெளியிட, டிஆர் பாலு பெற்றுக்கொண்டார். அதன்பின் அமைச்சர் துரைமுருகன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, மராட்டியத்தில் ஆட்சியின் மீது கவனத்தை செலுத்தி கோட்டையை கைவிட்டார்கள்.

இதே தான் பீகாரிலும் நடந்தது. கட்சியையும், ஆட்சியையும் ஒருங்கிணைத்து நடத்துவதற்கு ஒரு திறமை வேண்டும். அந்தத் திறமை தளபதி ஸ்டாலினிடம் மட்டுமே இருக்கிறது. இதனால்தான் அகில இந்தியாவும் தமிழகத்தின் ஆட்சியைப் பார்த்து புகழ்ந்து தள்ளுகிறது என்றார். இந்நிலையில் சென்னையில் உள்ள மண்டியிலும் திமுக கட்சியின் சார்பில் முப்பெரும் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் எம்பி தயாநிதி மாறன், அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் சேகர்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, ஆற்காட்டில் ஒரு மாநாடு நடைபெற்றது.

அப்போது கலைஞர் கருணாநிதி அவசரமாக வேறு ஒரு இடத்திற்கு கிளம்பி சென்றதால் என்னை பெரியாரை கவனித்துக் கொள்ளுமாறு கூறினார். நான் ஐயா பெரியார் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது பெரியார் என்னை பார்த்து உன் பெயர் மற்றும் ஊர் என்ன என்று கேட்டார். நான் இரண்டையும் சொன்ன பிறகு என்னுடைய ஜாதியை கேட்டார். அதையும் சொன்ன பிறகு சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்தார். அதன்பின் நீயும் பறையன் மாதிரி தான். வன்னியர் னா பெருசா நினைச்சுக்காத.

சவுத்தார்காட்ல உங்க நிலைமை என்னன்னு தெரியுமா? என்று கேட்டு கத கதையா நிறைய சொன்னார். நான் அன்னைக்கே முக்கால்வாசி மாறிட்டேன். தற்போதைய அரசியல் சூழலில் ஒரு தொண்டன் யார் எதிர்க்கட்சித் தலைவன் என்று என்னிடம் கேட்டான். நானும் அவரை தான் தேடிட்டு இருக்கேன் என்று சொன்னேன் என்றார். இந்த பேச்சைக் கேட்டு அரங்கத்தில் இருந்த கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் அமைச்சர் துரைமுருகனின் பேச்சுக்கள் தான் தற்போத வைரலாகி வருகிறது.

Categories

Tech |