கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாஜக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவை பாஜக மட்டுமல்ல அதிமுகவும் விமர்சனம் செய்து வருகிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட அண்மையில் திமுக அரசை கண்டித்து அறிக்கை கொடுத்திருந்தார். தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட்டுவருகிறது.
யார் எதிர்க்கட்சி என்று அதிமுக மற்றும் பாஜக இடையே போட்டி கிடையாது. நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். கூட்டணி கட்சிகளுடன் சுமுகமான உறவை வைத்திருக்கிறோம். அதிமுகவில் சசிகலாவின் வருகை குறித்து என்னால் கருத்து ஏதும் கூற முடியாது. அரசியலுக்கு யார் வேண்டுமென்றாலும் வரலாம், போகலாம். இதுகுறித்து அதிமுக தலைமை கருத்து தெரிவிக்கின்றனர். சில இடங்களில் நாங்கள் சொல்வதை முதலமைச்சர் கேட்டுக்கொள்கிறார். உதாரணமாக கோவில் திறப்பது, ஆவின் டெண்டர் ஆகியவற்றில் எங்களுடைய கருத்துக்களை முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் திமுக பேசுவது எல்லாம் பாஜக எதிர்த்து தான் என்று கூறினார்.