தேர்தல் பிரசாரத்தின் போதும், அதற்கு முன்பும் தி. மு. க. , தலைவர் ஸ்டாலின், முதல்வராக முடியாது என்று, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கூறியதை சுட்டிக்காட்டி, தி. மு. க. , வினர் அவர்களைக் கலாய்த்து வருகின்றனர்.
தி. மு. க. , வினர் வெளியிட்டுள்ள பட்டியல்;.
‘‘ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது’’ –.
சொன்னவர்: டி. டி. வி. , தினகரன் .
இடம்: திருவொற்றியூர்.
நாள்: 13. 03. 2017.
“மு. க. ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை” .
சொன்னவர்: விஜயபாஸ்கர்.
இடம்: பொன்னமராவதி.
நாள்: 27. 02. 2018.
“இலவு காத்த கிளி ஸ்டாலின்”.
சொன்னவர்: ஜெயக்குமார்.
இடம்: சென்னை.
நாள்: 29. 10. 2018.
“கடைசி வரை ஸ்டாலின் கனவு நிறைவேறாது” –.
சொன்னவர்: செல்லூர் ராஜூ.
இடம்: மேலூர்.
நாள்: 21. 08. 2019.
“ஸ்டாலின் ராசியில்லாதவர்”.
சொன்னவர்; தம்பிதுரை.
இடம்: கரூர் .
நாள்: 26. 09. 2020.
“மு. க. ஸ்டாலின், ஒரு நாளும் முதல்வர் ஆக முடியாது. ஜாதகம் சரியில்லை” .
சொன்னவர்: எச். ராஜா .
இடம்: சிவகங்கை.
நாள்: 26. 12. 2020.
“ஸ்டாலின் முதல்வராக முடியாது” .
சொன்னவர்: மு. க. அழகிரி.
இடம்: மதுரை.
நாள்: 03. 01. 2021.
“மு. க. ஸ்டாலினுக்கு ஜாதகம் சரியில்லை” –.
சொன்னவர்: ஆர். பி. உதயகுமார்.
இடம்: உசிலம்பட்டி.
நாள்: 04. 01. 2021.
‘ஸ்டாலின் எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது;.
வாய்பில்லை ராஜா வாய்பில்லை’’.
சொன்னவர்; சீமான்.
நாள்: 12. 03. 2021.
“மு. க. ஸ்டாலின் கனவில் கூட, எக்காலத்திலும் முதல்வராக முடியாது”.
சொன்னவர்: எல். முருகன்.
இடம்: மதுரை.
நாள்: 16. 02. 2021.
“இனி ஒருநாளும் ஸ்டாலின் முதல்வராக முடியாது”.
சொன்னவர்: ஓ. பன்னீர்செல்வம்.
இடம்: பல்லாவரம்.
நாள்: 20. 03. 2021.
“ஸ்டாலினின் வெற்றிக்கனவு பலிக்காது”.
சொன்னவர்: எடப்பாடி கே. பழனிசாமி.
இடம்: ஓமலூர்.
நாள்: 03. 04. 2021.
இதற்கெல்லாம் மேலாக, ‘‘அண்ணன் கலைஞர் உடல் நலிவுற்றிருந்தபோது கொடுத்த வாக்குறுதிபடி, தம்பி ஸ்டாலினை முதல்வராக்குவேன். உண்மையான திராவிட இயக்கத் தலைமையை ஆட்சியில் அமர்த்தப் பாடுபடுவேன்” என, ம. தி. மு. க. , தலைவர் வைகோ சொன்னபோது, அவரை எதிர்க்கட்சியினர் சராமாரியாகக் கேலி, கிண்டல் செய்து விமர்சித்தனர்.
இவ்வாறு, எதிர்க்கட்சி அணியில் இருக்கும் பலரும், ஸ்டாலினுக்கு முதல்வர் வாய்ப்பே இல்லை என்ற சொன்ன நிலையில், இன்று அவர் முதல்வராகப் பதவியேற்றார். இதைக் கொண்டாடி மகிழ்ந்த தி. மு. க. , வினர் எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களைப் பட்டியலிட்டு, அவர்களைக் கலாய்த்து வருகின்றனர்.