அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சினையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு எடப்பாடி, ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதனையடுத்து ஓபிஎஸ் வகித்த பொருளாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்குவதாக அறிவித்தார்.
கடந்த 17-ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்ட ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அதிமுக கட்சியின் துணை தலைவராக ஆர்.பி உதயகுமார் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஆனால் கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.எஸ்பி வேலுமணி எதிர்க்கட்சி துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஆர்.பி உதயகுமார் தேர்ந்தெடுக்கப் பட்டது எஸ்.பி வேலுமணி ஆதரவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.