சட்டமன்ற உறுப்பினர்களை எங்கு எப்படி அமர வைக்க வேண்டும் என முடிவெடுக்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதக்கூடாது என உத்தரவிடக்கோரி கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது, சட்டப் பேரவை உறுப்பினர்களை எங்கு அமர வைப்பது, எப்படி அமர வைப்பது என்பது முழுக்க முழுக்க சபாநாயகரின் வரம்புக்கு உட்பட்டது. அதில், நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி லோகநாதன் மனுவை தள்ளுபடி செய்துள்ளார்..