எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டை பற்றி நான் கவலைப்பட போவதில்லை என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் முக ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மழைநீர் வடிகால் அமைத்து அதில் நடந்த முறைகேடுகளை விசாரணை கமிஷன் அமைத்து கண்டுபிடிப்போம் என்று தெரிவித்தார். சேத விவரம் குறித்து மொத்த செய்த கணக்குகள் வந்தபின் அதை தயார்செய்து பிரதமருக்கு அனுப்பி வைப்போம் எனவும், தேவைப்பட்டால் அமைச்சர்கள் நேரடியாக சென்று பிரதமரிடம் கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளோம் எனவும் கூறினார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேட்ட கேள்விக்கு ‘நான் அதை பற்றி கவலைப்படுவது கிடையாது.
என்னுடைய வேலை மக்களுக்கு பணி செய்வது. ஓட்டுபவர்களுக்கு மட்டுமல்லாமல், ஓட்டு போடாத மக்களுக்கும் சேர்த்து வேலை செய்வதுதான் எனது கொள்கை. அந்த வழியில் எங்களது வேலை சிறப்பாக இருக்கும். எதிர்க்கட்சிகள் என்ன புகார் செய்தாலும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்கள் செய்த அக்கிரமத்தை, அநியாயத்தை மழை முடிந்த பிறகு விசாரணை கமிஷன் அமைத்து எங்கெங்கு தவறுகள் நடந்துள்ளது என்பதையும், யார் யார் குற்றவாளிகள் என்பதையும் கண்டுபிடித்து அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.