Categories
மாநில செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இல்லை…? – பரபரப்பு தகவல்…!!!

மே2-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து மே 7-ஆம் தேதி மு.க ஸ்டாலின் முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக 65 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக அமைந்திருக்கும் நிலையில் நான்கு இடங்களில் மட்டுமே பெற்று அதிமுக கூட்டணி கட்சியான பாஜக கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |