அதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில்,புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து,அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, நேற்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என சட்டப்பேரவை செயலகத்திற்கு அதிமுக கடிதம் அனுப்பியுள்ளது.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி வேறு ஒருவருக்கு அளிக்கப்பட உள்ள நிலையில், அந்த பதவி யாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அதிமுக சட்டமன்ற கட்சியின் நிர்வாகிகளை மாற்றக்கூடிய வகையில் மனுக்கள் வந்தால் நிராகரிக்க வேண்டும் என்றும், பொதுக்குழு குறித்து நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தில் வழக்குகள் இருப்பதால் நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.