எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை ஏன் குறைக்க வில்லை என்று பா. ஜனதா கேட்டுள்ளது.
பா ஜனதா செய்தியாளர் கவுரவ் பாட்டியா நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் பேசியதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மதிப்பு கூட்டு வரியை குறைக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பா. ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு நிவாரணங்கள் வழங்கும்போது எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் வழங்காதது ஏன்? மத்திய அரசை குறை சொல்லி விட்டு தாங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கின்றனர். மேலும் இதன் மூலமாக மலிவான அரசியல் செய்கின்றனர். ராஜஸ்தானில் மதிப்பு கூட்டு வரி 32.19 ரூபாய் ஆனால் உத்தரப் பிரதேசத்தில் 21.86 ரூபாய் ஆகும். எனவே பெட்ரோல் மற்றும் டீசல் விவகாரத்தில் பிக்பாக்கெட் அடிப்பதாக ராகுல் காந்தி கூறினார். ஆனால் காங்கிரசை விட பெரிய பிக்பாக்கெட்காரர் யாரும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.