Categories
உலக செய்திகள்

எதிர்த்து பேசிய 10 வயது மகள்… கொடூர செயல் செய்த தந்தை…!!

தன்னை எதிர்த்துப் பேசிய 10 வயது மகளை தந்தையே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரானை சேர்ந்த Hussein Alef  என்பவர். இவருக்கு Hadith Orujilu என்ற 10 வயது மகள்  உள்ளார். இந்நிலையில் Hussein Alefஐ  அவரது மகள் எதிர்த்து  பேசியதால் பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். அதோடு Hussein Alef  மகளை கொலை செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என அருகில் உள்ளவர்களிடம் விசாரித்த நிலையில்  அவர் செய்த கொடூர சம்பவம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது .

இதனை அறிந்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்தபோது எனது பேச்சை கேட்காமல் எதிர்த்து பேசியதால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் கொன்று விட்டேன் என காரணம் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி இவ்வாறு செய்தால் சில வருடங்கள் சிறையில் இருந்த பின்னர் அபராதம் செலுத்தி ஜாமினில் வெளியே வந்துவிடலாம் என நினைத்து தான் இவ்வாறு செய்தேன் என்றும்  கூறியுள்ளார். ஈரானில் இவ்வாறு கொலை செய்வது பெரிய குற்றமாக கருதப்பட்டாலும், தந்தை அல்லது பாதுகாவலரால்  கொல்லப்படுவதில் இருந்து விலக்கு அளிப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |