Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எதிர்பாக்கல..! துணை கேப்டன்….. ‘இது கனவா?’…. என்னையே கேட்டேன்….. நெகிழ்ந்து போன சூர்யகுமார் யாதவ்.!!

நான் கண்களை மூடிக்கொண்டு ‘இது கனவா?’ என்று என்னையே கேட்டுக்கொண்டேன் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுகிறது. டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் டி20 தொடருக்கான துணைக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டி20 அணியில் மூத்த வீரர்களான கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம்பெறவில்லை. ரோஹித் காயத்தால் விலகியுள்ளார். இருப்பினும் ஒருநாள் போட்டிகளில் ரோஹித் கேப்டனாகவும், ஹர்திக் துணை கேப்டனாகவும்  நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஜனவரி 03 செவ்வாய்க்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் துணைகேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவ் டைம்ஸ் ஆஃப் இந்தியா உடனான உரையாடலில் தனது நியமனம் குறித்து உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து சூர்யா கூறியதாவது,  “இது (துணை கேப்டன் பதவி) நான் எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால் கடந்த ஆண்டு எனக்கு இருந்த விதம், இது எனக்கு ஒரு வெகுமதி போன்றது என்று என்னால் கூற முடியும். நான் அதைப் பற்றி மிகவும் நன்றாக உணர்கிறேன், நான் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் கண்களை மூடிக்கொண்டு ‘இது கனவா?,’ என்று என்னையே கேட்டுக்கொண்டேன். இது கனவு என்றே இன்னும் உணர்கிறேன். தந்தை அந்த செய்தியை (அணியை) எனக்கு அனுப்பினார், ஏனென்றால் அவர் எப்போதும் சமூக ஊடகங்களில் இருக்கிறார். பிறகு, நாங்கள் ஒருவருக்கொருவர் பேசினோம். அவர் எனக்கு ஒரு சிறிய செய்தியையும் அனுப்பினார்: ‘எந்தவொரு அழுத்தத்தையும் எடுத்து பேட்டிங் ஆட வேண்டாம், உனது பேட்டிங்கை அனுபவிது ஆட வேண்டும் என்று கூறினார்.

மேலும் பல வருட கனவுக்கு எனக்கு பலன் கிடைத்துள்ளது. நான் விதைத்த விதைகள் மரமாக வளர்ந்து, அதன் பழங்களை தற்போது அனுபவித்து வருகிறேன். இந்திய அணிக்கு விளையாடிய காலத்தில் இருந்து என் மீது எப்போதும் பொறுப்பு மற்றும் அழுத்தம் இருந்தது. அதே நேரத்தில் என்னுடைய ஆட்டத்தை ரசித்து நான் ஆடி வருகிறேன்என்றார்.

அதேபோல சக வீரர் ஹர்திக்கின் கேப்டன் பதவி மற்றும் ஆல்ரவுண்டருடன் அவர் எப்படி நன்றாகப் பழகினார் என்பது குறித்தும் சூர்யகுமார் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், “நிச்சயமாக. எங்களுடைய பந்தம் எப்பொழுதும் நன்றாகவே இருக்கிறது. இந்தியா மற்றும் எம்ஐக்காக (மும்பை இந்தியன்ஸ்) நாங்கள் நிறைய சேர்ந்து விளையாடியுள்ளோம். எங்கள் பேட்டிங் வரிசையும் ஒன்றன் பின் ஒன்றாக உள்ளன. நாங்கள் ஒன்றாக நிறைய பேட்டிங் செய்துள்ளோம்.  நாங்கள் ஒருவருக்கொருவர் பூர்த்தி செய்கிறோம். ஐபிஎல் மற்றும் சமீபத்தில் இந்தியாவை வழிநடத்தும் போது அவர் ஒரு அற்புதமான தலைவராக இருந்தார். எனவே, அவரது கேப்டன்சியின் கீழ் விளையாடுவதை நான் மிகவும் ரசிக்கிறேன்” என்று கூறினார்.

டி20 கிரிக்கெட்டில் 2022ல் இந்தியாவுக்காக அதிக ரன்களை எடுத்த வீரராக 32 வயதான சூர்யகுமார் இருக்கிறார். .31 போட்டிகளில் 46.56 சராசரியுடன் 1,164 ரன்களை எடுத்ததால், இந்த ஆண்டு டி20 தரவரிசையில் முதலிடம் வகிக்கிறார். இதில் 2 சதங்களும் அடங்கும். 2022 ஆம் ஆண்டில் டி20 போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்த இந்திய அணியில் ஒரே வீரர் இவர்தான்.

 

Categories

Tech |