விஜய் தொலைக்காட்சியில் மும்முரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவு என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ராபர்ட் மாஸ்டர் எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறக்கூடிய போட்டியாளர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது வோட்டிங்கில் குயின்சி குறைந்த வாக்குகளை பெற்று கடைசி இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து குயின்சி வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது.