Categories
சினிமா விமர்சனம்

எதிர்பாராத திருப்பம்!…. யூகி படத்தின் திரைவிமர்சனம் பற்றி ஓர் அலசல்…..!!!!

காணாமல்போன பெண்ணை தேடும் 2 குழுவினர் குறித்த கதைக்களம் தான் யூகி. அதாவது, போலீஸ் உயர் அதிகாரியாக உள்ள பிரதாப் போத்தன், சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவருக்கு உதவியாக செயல்பட்டதாக கூறப்படும் ஆனந்தி மர்மநபர்களால் கடத்தப்படுகிறார். இதையடுத்து ஆனந்தியை அரசியல் அமைப்பு சார்பின் நட்டியும், பிரதாப் போத்தன் சார்பாக டிடெக்டிவ் ஏஜென்சியை சேர்ந்த நரேனும் தேடுகின்றனர். கடைசியில் ஆனந்தியை யார் கண்டு பிடித்தார்கள்..? ஆனந்தியை கடத்தியது யார்..? பிரதாப் போத்தன் பிடிப்பட்டாரா..? என்பதே படத்தின் மீதிக் கதை ஆகும்.

இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ள கதிர், வித்தியாசமான நடிப்பை கொடுத்து கவர்ந்திருக்கிறார். இவர் டிடெக்டிவ் ஏஜென்சி நரேனுடன் சேர்ந்து ஆனந்தியை தேடுகிறார். இவரது கதாபாத்திரத்தின் திருப்பம் எதிர்பாராத வகையில் திரைக்கதை அமைத்து இருக்கின்றனர். நாயகியாக வரும் ஆனந்தி 2ஆம் பாதியில் தனது நடிப்பால் திரைக்கதையை தாங்கிப் பிடித்திருக்கிறார். இவரது அழுத்தமான நடிப்பு பார்ப்பவர்களை நெகிழ வைத்திருக்கிறது. டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நரேன், ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சாமி கதாபாத்திரத்தில் வரக்கூடிய நட்டி, பென்ஸ் காரில் அதிகநேரம் உலா வந்து கொண்டிருக்கிறார்.

இவரது நடிப்புக்கு தீனிபோடும் கதாபாத்திரம் அமையவில்லை. தனக்கே உரிய பாணியில் அசத்தியிருக்கிறார் ஜான்விஜய். அதன்பின் கொடுத்த வேலையை ஆத்மியா செய்திருக்கிறார். அதேபோல் மற்றொரு கதாநாயகியாக வரக்கூடிய பவித்ரா லட்சுமிக்கு வித்தியாசமான கதாபாத்திரம்.  கிரைம் திரில்லர் பாணியில் இந்த படத்தை டிரைக்டர் ஜாக் ஹாரிஸ் இயக்கியிருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை திரைக்கதை வேகமாகவே நகர்கிறது. அடுத்தடுத்து யூகிக்க முடியாத அளவிற்கு காட்சிகள் அமைத்து இருக்கின்றனர்.

எனினும் கடைசியில் திரைக்கதை கூறும் வேகத்தில் சற்று குழப்பம் ஏற்படுகிறது. கூற வந்ததை சுருக்கமாக சொல்லி இருக்கலாம். கணவன் மனைவி பாசம், வாடகை தாய் விஷயம், முன்னணி நடிகர்களின் பவர் என திரைக் கதையில் பல விஷயங்களை டிரைக்டர் சொல்லி இருக்கிறார். ரஞ்சின்ராஜ் இசையில் பாடல்களை ஒருமுறை கேட்டு ரசிக்கலாம். அத்துடன் பின்னணி இசையை ஆங்காங்கே ரசிக்க முடியும். புஷ்ப ராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவை ஓரளவுக்கு ரசிக்கமுடிகிறது.

Categories

Tech |