நடுவானில் போர்விமானம் டேங்கர் விமானத்துடன் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா நாட்டிற்கு சொந்தமான f-35 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக கடற்படை தெரிவித்துள்ளது. நடுவானில் வைத்து எரிபொருள் நிரப்பும் சமயம் போர் விமானம் எரிபொருள் நிரப்ப கூடிய டேங்கர் விமானத்தில் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் செயலிழந்த f-35 போர்விமானம் கலிபோர்னியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத்தில் இருந்த விமானி உயிருடன் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது என்று அரிசோனாவில் உள்ள கடற்படை விமான நிலையம் தெரிவித்துள்ளது. டேங்கர் விமானம் வயலின் அருகே தரை இறங்கியதாக கூறப்படுகிறது அந்த விமானத்தில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/breakingavnews/status/1311202185544454146