பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி கானா பாடகர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே பம்மல் மூவேந்தர் நகரில் 21வயதான கானா பாடகர் சுடர்ஒளி வசித்து வந்துள்ளார். இவர் நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சயில் கலந்து கொள்வதற்காக நண்பர்களுடன் சென்றுள்ளார்.அதன்பின் நிகழ்ச்சியை முடித்துவிட்டு பம்மலுக்கு திரும்பியுள்ளார்.
இதைதொடர்ந்து பரங்கிமலை சிமெண்ட் ரோடு சிக்னல் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்கு சென்ற கார் மீது மோதி சுடர்ஒளி கீழே விழுந்துள்ளார்.அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ஆம்னி பஸ்ஸின் சக்கரம் சுடர்ஒளி மீது ஏறியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியான பொதுமக்கள் ஓடி சென்று ஆம்னி பஸ் டிரைவரை அடித்து உதைத்துள்ளனர்.
மேலும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த சுடர்ஒளியை அங்கிருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.ஆனால் சுடர்ஒளியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .