சிவகங்கை மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த மூன்று பேர் விபத்தில் பலியானது தொடர்பாக தேடப்பட்டு வந்த கார் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கச்சாத்தநல்லூர் கிராமத்தில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த முருகன், அதே பகுதியை சேர்ந்த தாமோதரன், முருகனுடைய மகன் வீரகெவின் பிரகாஷ் ஆகிய 3 பேர் மீதும் அந்த வழியாக தாறுமாறாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது. அதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதில் காரை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்நிலையில் காரை ஓட்டி வந்த டிரைவரை பிடிப்பதற்காக காவல்துறையினர் தனிப்படை அமைத்தனர். இதையடுத்து அந்த விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் கீழப்பெருங்கரை கிராமத்தில் வசித்து வரும் மாப்பிள்ளை சாமி என்பவரது மகன் ஞானபிரகாசத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.