கேஜிஎப் 2 திரைப்படத்திற்குப் பின் வந்த 777 சார்லி, தற்போது வந்துள்ள காந்தாரா போன்ற படங்கள் அடுத்தடுத்து வரவேற்பு மற்றும் வெற்றியை கர்நாடகாவில் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு பெற்று வருகிறது. ரிஷாப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் 2 வாரங்களுக்கு முன்னதாக கன்னடத்தில் வெளிவந்து கன்னட ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படமான “காந்தாரா” தமிழிலும் டப்பிங்காகி கடந்த அக்., 15 வெளியாகியுள்ளது. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் கர்நாடகாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஆண்ட ஒரு அரசன் நிம்மதி இழந்து தவிக்கிறார். பின் நிம்மதியைத் தேடிப் புறப்படுபவர் மலை கிராமப்பகுதி ஒன்றில் மக்கள் வழிபடும் கற்சிலை ஒன்றைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைகிறார்.
அக்கற்சிலையை தனக்கு தரும்படி கேட்கிறார். சாமியாடியாக உள்ள அந்த கிராமத்துவாசி ஒருவர் சத்தமாகக் கத்தி, அந்த கத்தல் ஒலிகேட்டது வரையிலான அரசரின் நிலங்களை கிராமத்து மக்களுக்குத் தந்தால் கற்சிலையை எடுத்துக்கொண்டு போகலாம் என்று கூறுகிறார். அரசரும் அதற்கு சம்மதம் தெரிவித்து அக்கிராமத்து மக்களுக்கு தனக்குச் சொந்தமான நிலங்களைத் தந்து கற்சிலை கடவுளை தனது நாட்டிற்கு எடுத்துச் செல்கிறார். பல்வேறு வருடங்களுக்கு பின் கடந்த 1970-ல் அந்த அரசரின் வாரிசுகள் தங்களது முன்னோர் கொடுத்த அந்நிலத்தை மீண்டுமாக கிராமத்து மக்களிடமிருந்த பெற முயற்சி செய்க்கிறார்கள். இதனிடையில் நீதிமன்றத்தில் ஒரு வாரிசு வழக்கு தொடர்கிறார். ஆனால் அவர் நீதிமன்ற வாசலில் ரத்தம்கக்கி சாகிறார்.
அதன்பின் 1990-ல் மற்றொரு வாரிசும், அந்த கிராமத்து மக்களும் எந்த பிரச்சினையும் இன்றி இருக்கின்றனர். அரசரின் வாரிசான அச்யுத்குமார் மக்களுக்கு நல்லவர் போன்று நடித்தாலும், அந்த நிலங்களை மீண்டுமாக எப்படியாவது கைப்பற்றும் திட்டத்தில் இருக்கிறார். ஒரு கட்டத்தில் அச்யுத் திட்டம் குறித்து அறிந்துகொண்டு நாயகன் அந்த மண்ணின் மைந்தன் ரிஷாப்ஷெட்டி, தன் மலை கிராம மக்களையும், தனது மண்ணையும் காப்பாற்ற முயற்சி செய்க்கிறார். அதனை தொடர்ந்து என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதிக் கதை ஆகும். கடற்கரை கர்நாடகா பகுதி, உடுப்பி பக்கமுள்ள மலை கிராம மக்களின் வாழ்க்கை முறை, அவர்கள் வணங்கும் கற் சிலை தெய்வம், கோலா திருவிழா, கம்பளா ரேஸ் என அப்பகுதிக்கே நம்மை அழைத்தச் சென்றது போல அவ்வளவு இயல்பாய் படத்தை எடுத்துள்ளார் டிரைக்டர் ரிஷாப் ஷெட்டி.
அவருக்கு பக்க பலமாக ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ் காஷ்யப், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், படத் தொகுப்பாளர் பிரகாஷ், பிரதீக் ஷெட்டி, அரங்க அமைப்பாளர் தரணி கங்கே புத்ரா, ஆடை வடிவமைப்பாளர் பிரகதி ரிஷாப் ஷெட்டி என பிற கலைஞர்களும் 30 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையை அப்படியே காட்ட உழைத்து இருக்கிறார்கள். கேஜிஎப் 2 திரைப்படத்திற்குப் பின் மீண்டும் ஒரு அசால்ட்டான வில்லனாக அச்யுத் குமார். அரசரின் வாரிசு எவ்வளவு நல்லவர் என ஊரே மெச்சும்போது இறுதியில் அவரது திட்டம் தெரிந்ததும் மக்கள் பொங்கியெழுகின்றனர். பார்க்காத கதைகள், அதிகமான ஈடுபாட்டுடன்கூடிய உழைப்பு, எதிர்பார்க்க முடியாத திருப்பங்கள் என ஒரு படம் அமையும்போது அது மொழிகளைக் கடந்து, பழக்க, வழக்கங்களைக் கடந்து ரசிக்கவைக்கும். அவற்றிற்கு இந்த காந்தாரா ஒரு சிறந்த உதாரணமாய் எதிர்காலத்தில் அமையும்.