தனுஷின் பிறந்த நாளுக்கு ஐஸ்வர்யா வாழ்த்து கூறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கூறவில்லை.
நடிகர் தனுஷும் இயக்குனர் ஐஸ்வர்யாவும் 2004 ஆம் வருடம் காதலித்த திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் சென்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக இணையத்தில் அறிவித்தார்கள். தற்பொழுது ஐஸ்வர்யா தனது மகன்களுடன் அப்பா ரஜினி வீட்டில் வசித்து வருகின்றார். இருவரும் அவரவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்கள்.
இவர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாள் அன்று கூட வீட்டில் இல்லாமல் படம் பிடிப்பு தளத்தில் வேலை செய்தார். இந்நிலையில் இவரின் பிறந்தநாளுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா மட்டும் வாழ்த்து கூறவில்லை. ஐஸ்வர்யா இயக்கத்தில் கடைசியாக வெளியான ஆல்பம் பாடலுக்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் ஐஸ்வர்யா தோழியாக வாழ்த்து கூறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐஸ்வர்யா தனுஷுக்கு வாழ்த்து கூறவில்லை.