மாஸ்டர் திரைப்படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய்க்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . இவர் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.
2020, signing off with exclusive posters of #Master 🤩 pic.twitter.com/VP7e3Jst8r
— XB Film Creators (@XBFilmCreators) December 30, 2020
மேலும் அர்ஜுன் தாஸ் ,ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை திரையரங்கில் காண ரசிகர்களும் , திரையுலக பிரபலங்களும் மிக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் . இந்நிலையில் மாஸ்டர் படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது . இந்த புகைப்படங்களை பார்க்கும்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது . தற்போது இணையத்தில் இந்த புகைப்படங்கள் தீயாய் பரவி வருகிறது .