Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எதிர்ப்பார்த்த விலை கிடைக்கல…. மிளகாய் விளைச்சல் குறைவு…. வேதனையில் விவசாயிகள்….!!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிளகாய் விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர், சிக்கல், மல்லல், திருஉத்திரகோசமங்கை, தாளியரேந்தல், மட்டியரேந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிளகாய் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. தற்போது சீசன் உள்ள நிலையில் இந்த ஆண்டும் முதுகுளத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் மிளகாய் விளைச்சல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோடை மழை இல்லாததால் மிளகாய் விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டு ஒரு கிலோ மிளகாய் 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஒரு கிலோ மிளகாய் 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனவே மிளகாய்க்கு கூடுதல் விலை கிடைக்க அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |