மியான்மர் நாட்டில் உள்ள இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பின் முதல் முறையாக சீன நாட்டின் வெளியுறவு துறை மந்திரியான வாங் யி வருகை தந்துள்ளார். இதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மியான்மரில் அமைதி முயற்சிகளை மீறுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர். சீன நாட்டின் தலைமையிலான லங்காங்-மெகாங் ஒத்துழைப்பு குழு கூட்டம், மியான்மர் நாட்டில் உள்ள பாகன் நகரில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் மீகாங் டெல்டா பகுதி நாடுகளான மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மீகாங் டெல்டா பகுதியில் நீர்மின்சாரத் திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருவதனால் ஏற்படும் சுற்றுசுழல் பாதிப்பு குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளனர். சீன மீகாங்கின் மேல் பகுதியில் 10 அணைகளை கட்டியுள்ளதால் அந்த பகுதியை லாங்காங் என்று அழைக்கிறது. இது குறித்து மியான்மர் ராணுவ செய்தி தொடர்பாளரிடம் கூறியதாவது, “மியான்மர் நாட்டில் நடைபெறும் கூட்டத்தில் வெளியுறவு துறை அமைச்சர்கள் கலந்து கொண்டது நாட்டின் இறையாண்மை மற்றும் அரசாங்கத்தை அங்கீகரிப்பதாகும்” என அவர் தெரிவித்தார். மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.