1.கபசுர குடிநீர் பொடி 1 ஸ்பூன் அளவு எடுத்து 1 டம்ளர் தண்ணீரில் கலந்து 15-20 நிமிடங்கள் கொதிக்க வைத்து 1/4 டம்ளராக வெற்றியின் வடிகட்டி குழந்தைகள் 30 மி.லி. பெரியவர்கள் 60 மிலி அளவு காலை ஒரு வேளை குடிக்கவும்.
2.அவ்வப்போது சூடான தண்ணீர் குடிக்கவும்.
3.சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் கலந்த மிதமான வெந்நீரில் காலை, மாலை இருமுறை வாய் கொப்பளிக்கவும்.
4.10-15 நிமிடம் வரை தினமும் துளசி (அ) நொச்சி (அ) வேப்பிலை இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் மஞ்சள் பொடி மற்றும் உப்பு கலந்து நீராவி பிடிக்கவும்.
5.சூடான 1 டம்ளர் பாலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 3 சிட்டிகை மிளகு தூள் தேவையான அளவு நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து காலை, மாலை இருவேளை குடிக்கவும்.
6.இயற்கை மூலிகை டீ
இஞ்சி – 5 கிராம்,
துளசி – 10 இலை
மிளகு – 14 ஸ்பூன்,
அதிமதுரம் – 12 ஸ்பூன்
தண்ணீர் – 250 மி.லி.
மஞ்சள் தூள் – 14 ஸ்பூன்
மேல் குறிப்பிட்டவற்றை கொதிக்க வைத்து வடிகட்டி பெரியவர்கள் 50 மி.லியும், சிறியவர்கள் 20 மி.லியும் ஒரு நாளைக்கு இரண்டு வேளை குடிக்கவும்.
7.வேப்பம் பூ ரசம், தூதுவளை ரசம், மிளகு ரசம் இதில் ஏதேனும் ஒன்றை தினமும் அருந்தலாம்.
8.கீழ்க்கண்ட பொருட்களை பயன்படுத்தி இயற்கை பானம் தயாரித்து பெரியவர்கள் 250 மி.லி, யும், சிறியவர்கள் 100 மி.லி. யும் ஒரு நாளைக்கு இரண்டு வேளை குடிக்கவும்.
நாட்டு நெல்லிக்காய் – 50 மி.லி,
துளசி – 50 மி.லி
எலுமிச்சை – 5 மி.லி
மஞ்சள் பொடி – 1/4 ஸ்பூன்
தண்ணீர் – 150 மி.லி
இஞ்சி – 10 மி.லி
9.அன்னாசி, ஆரஞ்சு, சாத்துக்குடி பழச்சாறு அருந்தவும்.
10.தினமும் 15-20 நிமிடம் வரை காலை 7.30 மணிக்கு அல்லது மாலை 5 முதல் 6 மணிக்குள் சூரிய குளியல் எடுக்கவும்.