Categories
லைப் ஸ்டைல்

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை தேநீர்…. இனிமே தினமும் காலையில் இத குடிங்க…..!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதன்படி தற்போது கொரொனா சூழலில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிக அவசியம். அவ்வாறு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் காலையில் இந்த தேநீர் மட்டும் குடித்து வந்தால் போதும். துளசி, லவங்கப்பட்டை, கருப்பு மிளகு, சுக்கு மற்றும் உலர் திராட்சை கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகை தேநீரை தினசரி ஒன்று அல்லது இரண்டு முறை குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தேநீரில் நாட்டு சர்க்கரை எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம். மேலும் சூடான பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து தினசரி ஒன்று அல்லது இரண்டு முறை குடிப்பது நோய் எதிர்ப்பு சக்திக்கு அதிகரிக்கும்.

Categories

Tech |