நம் உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகப்படுத்துவதற்கு வீட்டிலேயே எளிய முறையில் ஜூஸ் செய்து குடித்து வரலாம். அதில் ஒன்று இஞ்சி- மஞ்சள் ஜூஸ்..!
தேவையானவை:
மஞ்சள் – தேவையான அளவு
எலுமிச்சை பழம் – 3
மிளகு பொடி – அரை டீஸ்பூன்
இஞ்சி – 150 கிராம்
செய்முறை:
முதலில் இஞ்சி மற்றும் மஞ்சளை எடுத்து நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சைச் சாற்றை ஒரு கிண்ணத்தில் பிழிந்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு இஞ்சி, மஞ்சள் விழுதை ஒன்றாக சேர்த்து, அதோடு எலுமிச்சம்பழச்சாறு கலந்து கொள்ளவும். அதன் பிறகு அத்துடன் மிளகுப் பொடியையும் சேர்த்து நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 60 முதல் 80 மில்லி லிட்டர் வரை பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி விரைவில் அதிகரிக்கும்.