திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் நகரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சதீஷ் பெயிண்டராக இருக்கிறார். கடந்த 6 மாதங்களாக சதீஷும் தென்காசியை சேர்ந்த மாலா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடையநல்லூரில் இருக்கும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து பாதுகாப்பு கேட்டு காதலர்கள் திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனால் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பின்னர் சதீஷுடன் போலீசார் மாலாவை அனுப்பி வைத்தனர்.