Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கோணபட்டியில் கூலித் தொழிலாளியான பாலமுருகன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் அழகுமணி(20) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த இருவீட்டு பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்தனர்.

இதனை அடுத்து காதல் தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலைத்தில் தஞ்சமடைந்தனர். அதன்பிறகு காவல்துறையினர் இரண்டு பேரின் பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து பாலமுருகனின் பெற்றோருடன் காதல் தம்பதியினரை காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |