Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதலர்கள் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலகாவேரியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு பெயிண்டரான மாதவன்(27) என்ற மகன் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக மாதவனும் அதே பகுதியில் வசிக்கும் ஐஸ்வர்யா(23) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி அரியலூர் மாவட்டத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனை அடுத்து காதல் தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனால் காவல்துறையினர் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு புதுமண தம்பதியினரை மாதவனின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |