Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள கடம்பூர் ஊராட்சி மேட்டுத்தெருவில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய்(23) என்ற மகன் உள்ளார். இவர் நெல் அறுவடை இயந்திரம் ஓட்டுநர் ஆவார். கடந்த 2 ஆண்டுகளாக பைத்தூர் வள்ளி நகர் பகுதியை சேர்ந்த பிரியா(20) என்ற கல்லூரி மாணவியும், விஜய்யும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி ஆத்தூர் வட சென்னிமலை முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து பாதுகாப்பு கேட்டு காதலர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் காவல்துறையினர் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி விஜயின் பெற்றோருடன் அவர்களை அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |