Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த வாரிசுகள்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாறைப்பட்டி வடக்கு தெருவில் காளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்களும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் காளியப்பன் தனக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியில் வசிக்கும் ஊர்காவல் படை வீரருக்கு பத்திரம் முடித்து கொடுத்துள்ளார். இதற்கு காளியப்பனின் மகன்களும், மகள்களும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலையில் இருந்த காளியப்பன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி காளியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |