Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்…. மனைவியை பிரிந்ததால் இன்ஜினியர் தற்கொலை…. தந்தையின் பரபரப்பு புகார்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பேரூரில் லோகநாதன்-பரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிபிவர்மன்(25) என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரான சிபிவர்மன் 25 வயதுடைய இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 13-ஆம் தேதி பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதனை அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் சிபிவர்மனின் வீட்டிற்கு சென்று தங்களது மகளை பிரித்து அழைத்து சென்றனர். இதுகுறித்து முசிறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து பிரச்சனையில் ஈடுபடக் கூடாது என எழுதி வாங்கினர்.

இந்நிலையில் காதல் மனைவியை பிரிந்த வருத்தத்தில் சிபிவர்மன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக லோகநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனது மகனின் சாவுக்கு காரணமான பெண்ணின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |