Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதுக்கு இங்க வேலி போட்ட ?…. செயலாளருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவரான செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த இடத்தை சுற்றி  செல்லப்பன் வேலி போட்டுள்ளார். இதனால் அதே பகுதியை சேர்ந்த ஜோசப், கனகவல்லி, பாண்டிச்செல்வி, சாத்தப்பன் ஆகிய 4 பேரும் செல்லப்பனிடம் தகராறு செய்து  கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுக்குறித்து செல்லப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |