Categories
தேசிய செய்திகள்

எதுக்கு இவ்வளவு அவசரம் காட்டுறீங்க ? ஆடி போன மத்திய அரசு… நீதிமன்றம் சரமாரி கேள்வி …!!

விவசாயிகள் போராடிவரும் நிலையில் மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து விளக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் இன்றைய விசாரணை தொடங்கிய உடனேயே இந்த போராட்டம் நடத்தப்படுவது குறித்து எல்லாம் நாங்கள் தற்போது எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. முழுக்க முழுக்க மத்திய அரசு இந்த விவகாரத்தில் கையாண்ட விதம் குறித்தும், அதேபோல இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு காட்டக்கூடிய ஆர்வம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விசாரிக்க போகிறோம் என்பதை கூறி விசாரணையை தொடங்கினார்கள். அதில் ஒரு முக்கிய விஷயமாக தற்காலிகமாக இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க நீங்கள் நினைக்கிறீர்களா ?  என்று மிக முக்கியமான கேள்வியை மத்திய அரசிடம் கேட்டு இருக்கிறார்கள்.

மத்திய அரசை பொறுத்தவரை அவர்கள் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவது இல்லை. அதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் என்ற திட்டமும் இல்லை என்பதை திட்டவட்டமாக கூறி இருந்தார்கள். ஆனால் விவசாயிகளை பொருத்தவரை நாங்கள் முழுமையாக இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டத்தை தொடருவோம் என்றே கூறியுள்ளார்கள். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை கடந்த ஆண்டு நடைபெற்ற போதும் சரி, சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போதும் சரி ஏன் நீங்கள் ஒரு குழுவை அமைத்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கக் கூடாது என்பதை மீண்டும் மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு வலியுறுத்தினார்கள்.

ஆனால் மத்திய அரசு அதற்கான நடவடிக்கையும் எடுக்காமல் வெறுமனே நேரடியாக மத்திய அரசு மற்றும் விவசாய பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை என்பது மட்டும் தான் தற்போது நடத்தப்பட்டு வந்த நிலையில்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துளர்கள். பேச்சுவார்த்தையில் முன்னேற்பாடுகள் ஏதும் நடக்காத பட்சத்தில் ஒரு குழுவை அமைத்து தீர்வு காண்பது மட்டும்தான் சிறந்ததாக இருக்கும் என்பதை கூட அவர்கள் இந்த வழக்கு விசாரணையின்போது கூறியிருக்கின்றார்கள்.

Categories

Tech |