Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எதுக்கு இவ்வளவு நாட்கள் ஆகுது….! எய்ம்ஸ் வருமா ? வராதா ? கேள்வி எழுப்பிய திமுக எம்.பி …!!

மக்களவை உறுப்பினர் டி ஆர் பாலு எம்பி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஏன் தாமதம் என கேள்வி எழுப்பினர். இதற்க்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மதுரை எய்ம்ஸ் மருத்துமனைக்கு 1267 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் 12 கோடி மட்டுமே செலவு செய்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தாமதமாக ஜப்பான் நிறுவனமே காரணம் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதிலளித்திருக்கிறார். பணிகளை தொடங்குவதில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார்.

Categories

Tech |