மத்திய பிரதேச மாநிலத்தில் ராகேஷ் என்பவர் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வருகிறார். இவர் நீண்ட மீசை வைத்திருந்தார். மீசையை வெட்டுமாறு பலமுறை கான்ஸ்டபிள் ராகேஷ்-யிடம் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டும் ராகேஷ் தலைமுடி மற்றும் மீசையை சரியாக வெட்டவில்லை.
இந்தக் காரணத்தினால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுபற்றி அவர் பேசுகையில், என்னுடைய மீசையை சரியான அளவில் வெட்டும்படி என்னிடம் கூறினார். ஆனால் நான் மறுத்து விட்டேன். இதற்குமுன் நான் பணியில் இருக்கும்போது யாரும் இப்படி என்னிடம் கூறியது இல்லை என்று ராகேஷ் கூறியுள்ளார்.