மதுரையில் மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்தில் வருகின்ற எப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இதனால் அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர்.
அந்த வகையில் மதுரை மாவட்டம் சேடப்பட்டி காவல்துறையினர் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது அல்லிகுண்டத்தில் வசித்துவரும் ராஜாராம் என்பவர் 13 மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதனால் காவல்துறையினர் ராஜாராம் மீது வழக்குப் பதிவு கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் வைத்திருந்த 13 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.