Categories
தேசிய செய்திகள்

“எதுக்கு சமோசா விலையை ஏற்றுனீங்க”… சமோசாவுக்காக தீக்குளித்து உயிரை விட்ட வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேசத்தில் சமோசா விலை உயர்த்தப்பட்ட காரணத்தினால் வாலிபர் ஒருவர் தீக்குளித்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் பல ஆண்டுகளாக அன்னூர் என்ற பகுதியில் சமோசா கடையில் சமோசா சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது இரண்டு சமோசாவின் விலை 15 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. திடீரென்று கடையின் உரிமையாளர் இரண்டு சமோசாவின் விலையை உயர்த்தி 20 ரூபாய்க்கு விற்பனை செய்தார்.

விலை உயர்வு குறித்து அந்த வாலிபர் கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற அந்த வாலிபர் பெட்ரோலை எடுத்து ஊற்றி தீக்குளித்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பிடம் அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |