Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதுக்கு நடவடிக்கை எடுக்கல ?…. பெண்ணின் விபரீத முடிவு…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  கீழப்பூங்குடி கிராமத்தில் வசந்தகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடு கட்டி வரும் பாதையை அதே பகுதியை சேர்ந்த சிலர் அடைத்துள்ளனர். இதுகுறித்து வசந்தகுமாரி அதிகாரிகளிடம் பலமுறை  புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த வசந்தகுமாரி நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தின் போது  உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் வசந்தகுமாரியை  அங்கிருந்து அழைத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |