Categories
தேசிய செய்திகள்

எதுக்கு பிடிவாதமா இருக்கீங்க ? மோடி அரசு மீது அதிருப்தி…. நீதிமன்றம் பரபரப்பு கருத்து …!!

டெல்லி விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கில் மிக முக்கியமான சில முன்னேற்றங்கள் தற்போது உச்ச நீதிமன்றத்தில்  நடைபெற்று வருவதை பார்க்க முடிகின்றது. இந்த வழக்கு தொடங்கிய உடனே மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றார.  இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் விவசாய போராட்டங்களை மத்திய அரசு கையாண்ட விதம் எங்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும், மத்திய அரசு என்ன செய்து இருக்கிறீர்கள் என்பது கூட எனக்கு தெரியவில்லை என்றும்,  நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீங்களே கூறுங்கள் என்ற ஒரு விஷயத்தை தலைமை நீதிபதி கேட்டு இருக்கின்றார்.

அது மட்டுமல்லாமல் மிக முக்கியமான முன்னெடுப்பதாக விவசாய சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நீங்கள் முடிவு செய்கிறீர்களா  அல்லது அதற்கான உத்தரவை நாங்கள் பிறப்பிக்கட்டுமா ? இந்த மூன்று வேளாண் சட்டங்ளில் இறுதி முடிவு எடுக்கும் வரை நீங்கள் அதனை நடைமுறைப்படுத்த மாட்டீர்கள் என்ற உத்தரவாதத்தை கொடுக்கிறீர்களா ? என்ற கருத்தை தலைமை நீதிபதி கொடுத்திருக்கின்றார்.

கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த போது வெறும் விவசாயிகளின் போராட்டத்தை எப்படி அமைதியாக நடத்துவது என்பது சம்பந்தமாக மட்டும் பேசிய நீதிபதிகள், தற்போது மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விஷயங்களை பகிர்ந்துள்ளார். விவசாயிகள் போராட்டத்தை நீங்கள் உடனடியாக, கவனமாக கையாள வேண்டும்.

குறிப்பாக இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்பதை நீங்கள் கூறினீர்கள் என்றால் நாங்கள் இதற்காக குழுக்களை அமைத்து பேச்சுவார்த்தை மூலமாக அடுத்தடுத்த விஷயங்களை செய்கிறோம். எதற்காக இவ்வளவு விடாப்பிடியாக இருக்கிறீர்கள் ? பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த போராட்டங்கள் வருத்தம் அளிக்க கூடியதாகவே உள்ளது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தலைமை நீதிபதி கூறி இருக்கின்றார்.

Categories

Tech |